மர்மங்கள் நிறைந்த போனகார்டு பங்களா | Bonacaud Bungalow Mystery

மர்மங்கள் நிறைந்த போனகார்டு பங்களா கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் அகத்தியர் மலைக்கு அருகில் உள்ளது. இந்த பங்களாவை பற்றி விசாரிக்கும் பொழுது தெரியவந்தது என்னவென்றால், இந்த பங்களாவில் இரவு நேரங்களில் வினோதமான சத்தங்களும், மின்னொளி எறிந்து எறிந்து அமையும் என்று கூறப்படுகிறது. ஆதலால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள் என்று அறியப்பட்டது. எனவே இது குறித்து நாம் காண்போம்.

போனகார்டு பங்களாவை நோக்கி செல்லும்போது வழியில் ஏற்படும் அனுபவங்கள்

போனகார்டு பங்களாவுக்கு செல்லும் வழியில் ஏற்படும் அனுபவங்களும் ,பயங்களும் நமக்கு தோன்றும் எண்ணங்களும் பலவாய் இருக்கின்றன. அடர்ந்த காடு வழியே பங்களாவை நோக்கி செல்லும் பொழுது சற்று மனதில் பயம் தோன்றுகிறது. அங்கு சுற்றி இருக்கும் மரங்களின் வேர்களும் நமக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமன்றி ஏதோ வினோதமான குறியீடு பயத்தை ஏற்படுத்துகிறது. சாலை முடிந்து மண்சாலையில் செல்கிறது அதை தாண்டி செல்லும்போது வண்டிகள் செல்ல ஏதுவாக வழி இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் வாகனம் கீழே தவறி விழலாம் என்ற நிலைமையே உள்ளது.

போனகார்டு பங்களாவின் தோற்றம்

பராமரிக்கப்படாத போனகார்டு பங்களா அதன் கொடூர தோற்றத்தோடு காட்சியளிக்கிறது சுமார் அரை நூற்றாண்டு கடந்தும் இந்த பங்களாவில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத நிலை ஆச்சரியப்படுத்துகிறது. பங்களாவின் பெயர் பலகையில் 25 ஜிபி என்று பொறிக்கப்பட்டுள்ளது நுழைவாயில் கதவு துருப்பிடித்து பேய் பங்களாவின் தோற்றத்தை நமக்கு காட்டுகிறது நுழைவாயில் கதவைத் திறந்ததும் அங்கிருந்த பறவைகள் திடீரென பறந்து சென்றது சற்றே அச்சத்தை ஏற்படுத்தும் செடி கொடிகள் அனைத்தும் பின்னிப்பிணைந்து இருக்கும் மனிதர்கள் அங்கு வாழ சற்றும் ஏதுவாய் இல்லாமல் அந்த போனகார்டு பங்களா இருந்தது.

கிறிஸ்துமஸ் மரத்தினடியில் இருக்கும் 13 வயது சிறுமி

போனகார்டுபங்களாவில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் 13 வயது சிறுமி அங்கு அமர்ந்து இருப்பது போல் காட்சியளிக்கும். இதை பல மக்கள் பார்த்துள்ளதாக கூறுகின்றனர். இது அந்த இறந்த சிறுமியின் ஆவியா? யார் அந்த சிறுமி?இல்லை அங்கு வேறு ஏதும் அமானுஷ்யங்கள் இருக்கின்றதா ! அந்த போன காடு பங்களாவில் யார் வசித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ஏன் மர்மங்கள் நிறைந்த பேய் பங்களாவாக மாறிவிட்டது.

யார் அந்த 13 வயது சிறுமி?

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் ஊரில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகஸ்தியர் மலையில், தோட்டத்தின் மேலாளராக பிரிட்டிஷை சேர்ந்தவர் இருந்தார். அவர் தோட்டத்தில் இருந்து 2 ,3 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பங்களாவை கட்டினார் .அந்த பங்களா தான் போனகார்டு பங்களா என்று தற்போது அழைக்கப்படுகிறது ஜி 25 என்றும் அழைக்கப்படுகிறது. 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டிஷை சேர்ந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தை திடீரென இறந்து விட்டது. அதன் பின்பு அவர்கள் அங்கு இருக்க விருப்பம் இல்லாமல் தன் நாட்டிற்கு திரும்பி சென்று விட்டனர்.

போனகார்டு பங்களாவில் 13 வயது சிறுமியின் ஆவி மட்டும்தான் உள்ளதா?

சில நாட்கள் சென்ற பின் ஒரு சிறுமி அங்கு விரகு பெருக்குவதற்காக சென்றார். அச்சிறுமி வீடு திரும்பிய பின் அவளின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் தென்பட்டது. அச்சிறுமி பிரிட்டிஷ் ஆங்கிலத்தை சரளமாக பேசினாள். இது எப்படி சாத்தியமாகும் என்று அப்பகுதி மக்கள் நினைக்க பிரிட்டிஷியை சேர்ந்த அக்குழந்தையின் ஆவிதான் இச்சிறுமி மீது இருக்கும் என்று கூறினார்கள். அப்பகுதியில் இருக்கும் ஒரு சாமியாரிடம் கேட்ட பொழுது அவர் இங்கு பல ஆவிகள் உள்ளது, அக்குழந்தையின் ஆவி மட்டும் இல்லை என்று கூறுகிறார். அது மிகவும் கோபமாய் உள்ளதாகவும், மேலும் சாமியார் தன்னால் மட்டுமே பேய்களை விரட்ட முடியும் என்று கூறுகிறார். அங்கு கொத்தடிமைகளாக பணிபுரிந்த மக்களின் சாபமும் தான் இப்படி ஆகிவிட்டது என்று அங்குள்ள மக்களும் கூறுகின்றனர்.இது சமூக விரோதிகளின் செயலாகவும் இருக்கலாம் என்றும் பேச்சு அடிப்படுகிறது.

முடிவுரை

இதுவரை நாம் மர்மங்கள் நிறைந்த போனகார்டு பங்களாவை பற்றி பார்த்த அனைத்தும் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த நிகழ்வுகளாகும். ஆனால் நம் எவ்வளவு தான் பங்களாவை பற்றிக் கேள்விப் பட்டாலும் அதில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் இருக்கத்தான் கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் குழந்தையின் ஆன்மா மட்டுமின்றி பல ஆன்மாக்கள் கோபத்துடன் இருக்கின்றது எனவும் ,கொத்தடிமைகளாக பணிபுரிந்த மக்களின் சாபம் எனவும் ,சமூக விரோதிகளின் செயல் எனவும் பல கூற்றுகள் இப் பங்களாவை பற்றி கூறப்படுகிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன