10,000ரூ சம்பளத்தில் தங்கம் வாங்க சிறந்த வழி| How to buy Gold with small savings

இன்றைய உலகில் மக்கள் அனைவரும் விரும்பத்தக்க ஒன்றாக இருப்பது தங்கம் மிக முக்கியமானது. தங்கம் ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது .தங்கம் வாங்குவது என்பது எல்லோருக்கும் கனவாகவும் ஆசையாகவும் உள்ளது .நல்ல வருமானத்தில் உள்ளவர்கள் எளிதாக தங்கத்தை வாங்கி விடுவார்கள்.ஆனால் குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு தங்கம் வாங்குவது என்பது மிக அரிதான ஒன்றாகும். பணம் உள்ளவர்களுக்கும் நகை வாங்குவது என்பது மிக எளிதாக உள்ளது .ஆனால் நடுத்தர மக்களுக்கு அது ஒரு கனவாக உள்ளது .அந்த கனவை நினைவாக்க நகை வாங்குவதற்கான ஒரு சில குறிப்புகளை இங்கு காண்போம்.

பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தங்கம் வாங்குவதற்கான வழிமுறைகள்

பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் நகை சேகரிப்பது எப்படி ?அதாவது ஒரு மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் வாங்கும் ஒரு நாள் வருமானம் ரூபாய் 333 ஆகும். தங்கத்தை சேகரிக்க வேண்டும் என்று நினைத்தால் மாதம் 25% சேகரிக்க வேண்டும் . அதாவது ஒரு நாளைக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிக்க வேண்டும் .அவ்வாறு சேமித்தால் மாதம் 2500 ரூபாய் வரை சேமிக்கலாம் .இந்த 2500 ரூபாயை பணமாக வைத்திருந்தால் செலவு செய்து விடுவோம். அதையே மாதம் அரை கிராம் தங்கக் காசாக வாங்கி வைத்தால் 12 மாதத்திற்கு 6 கிராம் சேமிக்கலாம் .இதற்கு மாற்றாக மற்றொரு வழியும் உள்ளது நகைகடையில் மாதம் 2500 ரூபாய் நகை சீட்டாக கொண்டு சேமிக்கலாம் .இவ்வாறு சேமித்தால் கூட தேவையான நகையை சேமித்து விடலாம் அல்லது அந்த அரை கிராம் அளவுக்கு தங்க நகையாக கூட நாம் வாங்கிக் கொள்ளலாம். இது பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் சேமிப்பதற்கான ஒரு எளிய வழி முறையாகும் இதேபோல் இருபதாயிரம் முப்பதாயிரம் போன்ற அதிக அளவு சம்பளம் வாங்குபவர்கள் கூட இதே மாதிரி சேமிக்கலாம். அதை விட குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் கூட இந்த முறையில் சேமிக்க முடியும்.மேலும் தங்க பட்டயம் வாங்கிக்கொண்டு சேமிக்கலாம் வங்கிகளில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .இதற்கு செய்கூலி இல்லை சேதாரம் தேவையில்லை.

செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க சிறந்த வழி ‘தங்கப் பத்திரம்’ எப்படி? வாங்கலாம்

டிஜிட்டல் தங்கம்:

நேரடியாகத் தங்கம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற பல்வேறு செலவினங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது பெரும் சவாலான ஒன்றாகும். சுத்த தங்கம் அல்லாமல் ஆபரணத் தங்கத்தை வாங்கும்போது தரம் குறித்த கேள்வியும், மீண்டும் விற்கும்போது கேள்விகளை எழுப்புகிறது. இதனால் நேரடியாக தங்கமாக அல்லாமல் டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருகிறது.ஆன்லைனில் டிமேட் கணக்கு தொடங்கி ஏராளமானோர் தங்கம் வாங்கி வருகின்றனர். இதேபோன்று மாற்று முறையில் தங்கம் வாங்கும் திட்டமே தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bond) ஆகும். இதில் தங்கத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினை இல்லை. செய்கூலி, சேதார பிரச்சினையும் இல்லை.

தங்கக் கடன் பத்திரம்:

மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுபவையே தங்கக் கடன் பத்திரங்கள் ஆகும். அன்றைய விலையில் ஒரு கிராம் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலையில் இந்தத் தங்கக் கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
முதலீட்டுக்காகத் தங்கம் வாங்குபவர்கள் நேரடி தங்கத்திற்குப் பதிலாக தங்கக் கடன் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். இந்தப் பத்திரங்களில் குறிப்பிடப்படுவது 24 கேரட் சுத்தத் தங்கம் ஆகும். ஆனால், இவற்றை வாங்குவது மற்றும் விற்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராமில் இருந்து 4 கிலோ வரை தங்கக் கடன் பத்திரங்களாக வாங்க முடியும். தங்கம் விற்பனைக்கு ஆவணமாக பத்திரமாக வழங்கப்படும். இதனை டிமேட் கணக்கிலும் வாங்கிக் கொள்ளலாம்.

செய்கூலி, சேதாரம் இல்லை:

டிமேட் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால் பங்குத் தரகர்கள் மூலமாகவே இந்தத் தங்கக் கடன் பத்திரங்கள் வாங்க விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஆன்லைன் பேமண்ட் வசதிகள் கொண்டு பணம் செலுத்துபவர்களுக்குக் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. இந்தத் தங்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. ஆனால் இதனை நேரடியாக தங்கமாக வாங்க முடியாது.
இப்படி வாங்கப்படும் தங்கக் கடன் பத்திரம் முதிர்வடையும் காலம் 8 ஆண்டுகள். கடன் பத்திரத்தை வாங்கி 8 ஆண்டுகள் கழித்தே அந்தக் கடன் பத்திரத்தைக் கொடுத்து, அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் விற்கிறதோ அந்த விலையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

வரி கிடையாது:

இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வதில் பல்வேறு நலன்கள் உள்ளன. 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடைந்த பிறகு கிடைக்கும் நீண்ட கால முதலீட்டு வருவாய்க்கு வரி கிடையாது. அதே போல இந்தத் தங்க முதலீட்டுப் பத்திரத்தை வைத்திருக்கும்போது வருடத்திற்கு 2.5 சதவிகிதம் அளவிற்கு, 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன