ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இதுதான் – Rajendra Chola Kadaram Lembah Bujang

இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார்.ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்னும் மற்றொரு பெயரும் உண்டு . கடாரம் கொண்டான் என்ற பெயர் எப்படி இவருக்கு வந்தது என்பதை இனி காண்போம் .

ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இதுதான்

ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இதுதான்
ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இதுதான்

ஒரு நாட்டின் வளத்திற்கும் ,பலத்திற்கும் ,வளர்ச்சிக்கும் வணிகம் தான் அச்சாணி. வணிகர்கள் தமிழகத்தில் இருந்து சீனாவுக்கும் ,சீனாவிலிருந்து தமிழகத்துக்கும் வணிகம் செய்தனர் மேலும் இன்னும் சில நாடுகளிலும் வணிகம் செய்தனர். சோழர்களும் ஸ்ரீவிஜய அரசரும் நட்புறவுடன் இருந்தனர்.இருப்பினும் சீனர்கள் மற்றும் தமிழர்கள் வணிகம் செய்ய ஸ்ரீவிஜயா அரசு ஒரு ஆணை பிறப்பித்தது .அதில் கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. வணிகம் செய்வதை ஸ்ரீவிஜயாதிற்கு கொடுக்க வேண்டும். அதில் அவர்கள் சீனத்தில் வணிகம் செய்து இரட்டிப்பு லாபம் இல்லையெனில் ஆதிக்க வரி செலுத்தி ,சீனத்தில் தமிழர்கள் வணிகம் செய்யவேண்டும் என்று ஆணை விதிக்கப்பட்டிருந்தது.

இதை ராஜேந்திர சோழனிடம் முறையிட்டனர். பின்பு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தூது அனுப்பப்பட்டது. அனால் அதற்கு ஸ்ரீவிஜய அரசு இதை மாற்ற முடியாது என்று கூற, அதற்கு அந்த தூதுவன் நிகழ் மாற்றம் செய்வதில்லை என்றால், ராஜேந்திர சோழர் படியெடுத்து வருவார் என்று கூறுகிறார். ஸ்ரீவிஜயம் அரசர் தூது கொண்டு வரவே மாதங்கள் ஆகிறது.. இதில் அவர் எப்படி படையெடுத்து வரப்போகிறார் என்று எண்ணினார் .ராஜேந்திர சோழர் போர் புரிவதற்காக போர் கப்பலை தயார் செய்து போருக்கு தயாராகினார்கள் அனைவரும். கடாரம் தற்போது கெடா என்று அழைக்கபடுகிறது இது மலேசியாவில் உள்ளது.

போருக்கு தலைமை தாங்கிய ராஜேந்திர சோழன்

போருக்கு தலைமை தாங்கிய ராஜேந்திர சோழன்
போருக்கு தலைமை தாங்கிய ராஜேந்திர சோழன்

இந்த போரில் ராஜேந்திர சோழனே தலைமை தாங்கினார். மேலும் அரசர் கிம்பெர் கம்போடியா அரசிடம் உதவி கேட்டார் .கிபருக்கும் ,தம்பரலிங்க அரசுக்கும் பிரச்சனை, தம்பரலிங்க அரசுக்கு ஸ்ரீவிஜயாம் ஆதரவு ,எனவே தம்பரலிங்க அரசு தமிழக வணிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது.போர் முடிந்ததும் தம்பரலிங்க அரசுடன் போர்புரிய உதவி செய்கிறேன் என்று ராஜேந்திர சோழர் கூறினார்.அதனை ஏற்று கிம்பரும் தமிழக வணிகர்களுக்கு உதவி செய்தார் .

ராஜேந்திர சோழன் கடாரத்தை முழுமையாக கைப்பற்றிய விதம்

ராஜேந்திர சோழன் கடாரத்தை முழுமையாக கைப்பற்றிய விதம்
ராஜேந்திர சோழன் கடாரத்தை முழுமையாக கைப்பற்றிய விதம்

ராஜேந்திர சோழன் கப்பலை செலுத்துமாறு ஆணையிட்டு போருக்கு சென்றார் பின்பு நேராக கடாரத்துக்கு சென்று அதில் போர் புரியாமல் அதற்கு முன் சில இடங்களில் போர் புரிந்து அதை வென்றார். கடாரம் அவருக்கு முழுமையாக தேவை அதில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதை விட்டுவிட்டு மற்றவற்றை கைப்பற்றினார். ஏனென்றால் அப்பொழுதுதான் தமிழக வணிகர்கள் சீனர்கள் மற்றும் அரேபியர்களுக்கு வணிகம் செய்ய உதவியாயிருக்கும் அது மிகப்பெரிய துறைமுகம்.

கடாரத்தை கைப்பற்றும் முன் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய இடங்கள்

கடாரத்தை கைப்பற்றும் முன் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய இடங்கள்
கடாரத்தை கைப்பற்றும் முன் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய இடங்கள்

ராஜேந்திர சோழன் முதலில் கடாரத்தை கைப்பற்றுவதற்கு முன் சில இடங்களை கைப்பற்றினர். அதில் முதலில் அவர் கைப்பற்றியது பண்ணை எனும் இடம். அது சுமத்ரா தீவில் கீழ்க்கரை பகுதியில் உள்ளது. ஏனெனில் வணிகத்திற்கு பண்ணை பொருட்களை எடுத்துச் செல்வதற்கு முக்கியமான இடமாக இருந்தது. அதன்பின் மலையூர் ,லம்புரி, மலேசியாவில் உள்ள சென்ட்ரல் மற்றும் தென் திசையை கைப்பற்றினார். பின்பு ஸ்ரீவிஜயம் சென்று அரசுடன் போர்புரிந்து அங்கும் வெற்றி கொண்டார். அதன்பின்பு படைகளை செலுத்தி பப்பளம் மற்றும் தற்கொலம் எனும் இடத்தை கைப்பற்றினார் .

முடிவுரை

ராஜேந்திர சோழன் ஸ்ரீவிஜயத்தின் அதிக படை பலம், வணிகம் , அதிக வரி செலுத்தும் இடம்மற்றும் கடாரத்தை எந்த சேதமும் இன்றி முழுமையாக கைப்பற்றினர். அந்த போரிற்கு பின்பு ஸ்ரீ விஜயத்தை மீட்டெடுக்க நூறு ஆண்டுகள் ஆனது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாட்டை மீட்டெடுக்க நூறாண்டுகள் தேவைப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு மிகப் பெரிய போரை நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்று போர்புரிந்து கடாரத்தை வென்றான். ஆதலால் தான் ராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என்று அழைக்கப்படுகிறார் .

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன