உலகில் ஆபத்து நிறைந்த புத்தகம் எது தெரியுமா? -The most dangerous book in the world

1.தி புக் ஆஃப் சோய்கா-The Book of Soyga

” சோய்கோ” என்றால் இலத்தின் மொழியில் படிப்பவர்களை கொள்ளும் புத்தகம் என்று பொருள். 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புத்தகம் இது .இந்த புத்தகம் பல்வேறான மந்திரங்களைப் பற்றி குறிப்புகள் உள்ளதால் மந்திரங்களின் தொகுப்பு என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இந்த புத்தகம் யாருடைய கண்களுக்கும் படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் 1990இல் இந்த புத்தகம் கண்டறியப்பட்டது. இந்தப் புத்தகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இரண்டு பாகங்கள் பிரிட்டிஷ் மியூசியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது .கண்டுபிடிக்கப் பட்ட இரண்டு பாகங்களுமே யாராலும் டீ கோட் பண்ணி படிக்க முடியாத அளவுக்கு ரகசிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது .இந்த இரண்டு பாகங்களில் ஒரு பாகத்தை ஜான் டி என்ற ஆராய்ச்சியாளர் அதை வாங்கி இதில் உள்ள வார்த்தைகளை பல வருடங்களாக டிகோட் பண்ணுகிறார். அதற்குப் பிறகு இதில் இருக்கும் மந்திர குறிப்புகளை படிக்க ஆரம்பிக்கிறார். படிக்க ஆரம்பித்த இரண்டரை வருடம் கழித்து இறந்துவிடுகிறார். இவருடைய மரணத்திற்குப் பிறகு இந்தப் புத்தகத்தை படித்தால் இரண்டரை வருடத்தில் இறந்து விடுவார்கள் என்ற ஒரு விஷயம் பயங்கரமாக பரவ ஆரம்பித்தது .அன்றிலிருந்துஇதைப் படித்த முதலும் ப கடைசியுமான நபராக ஜான் டி அழைக்கப்படுகிறார்.

2.டோமினாஸ் நரகத்தின் கவிதை-The Poem of Tominas Hell

டோமினோஸ் ஹெல் என்பது புத்தகம் இல்லை. இது ஒரு சிறிய கவிதையின் தொகுப்பாகும் .” லைக் எ ரோலிங் ஸ்டோன்”என்ற புத்தகத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு கவிதையின் தொகுப்பு ஆகும் .1990ஆம் ஆண்டு ஜப்பானில் வெளிவந்த ” லைக் எ ரோலிங் ஸ்டோன்” என்ற புத்தகத்தை தழுவி அமைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் இடம்பெற்ற சிறிய கவிதையின் தொகுப்பாகும் .டோமினோ என்ற சிறிய பையன் தன் மரணத்துக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தன் கண் முன்னே இறந்துபோன தன்னுடைய குடும்பத்தை பற்றி எழுதிய கடைசி கவிதை ஆகும். இந்த கவிதை தோமினோ விட்டு சென்றது முதல் கடைசி இறப்பு வரைக்கும் இதில் அடங்கும் .இதைப் படிப்பவர்கள் தோமினோ எழுதிய மரண வார்த்தைகளை திரும்ப திரும்ப நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி இறந்தும் உள்ளனர் .இதனால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்க யாரும் முன்வரவில்லை இதை படித்துப் பார்த்தால் ஒரு விதமான வித்தியாசமான உணர்வு தோன்றும்.

3.நெக்ரோனோமிகானின் புத்தகம்-The Book of Necronomicon

நெக்ரோ மிக்கான் என்றப் புத்தகம் இறந்தவர்களின் புத்தகம் என்று அழைக்கப்படுகிறது .இது இறந்தவர்களின் இறுதி புத்தகம் என்று கூறப்படுகிறது.இந்த புத்தகம் பயங்கரமான பேய்கள் பற்றி வரையப்பட்ட கொடூரமான புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தின் முக்கியமான கருத்து நன்றாக வாழ்ந்து கொடூரமான முறையில் இறந்து போனவர்களை எந்தவிதமான மந்திரங்களை பயன்படுத்தி உயிர் பிக்கலாம் என்பதைப் பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகத்தின் ஆசிரியர் லவ் கிராஃப்ட் இவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று இந்தப் புத்தகத்தைப் பற்றிய உரைகளை பதிவு செய்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் .இந்த புத்தகத்தில் உலகத்தில் உள்ள மொத்த கெட்ட விஷயங்களும் எழுதப்பட்டுள்ளது. இதில் வரையப்பட்டுள்ள ஒவ்வொரு வரைபடமும் ஒரு இனம்புரியாத பயத்தையும் ஒரு அமானுஷ்யமான உணர்வையும் ஏற்படுத்துகிறது.

4.தி புக் ஆஃப் க்ரிமோயர்-The Book of Grimoire

விச் கிராப்ட் கிரி மோரியர் என்ற புத்தகம் சூனியக்காரர்களின் புத்தகம் என்று அழைக்கப்படுகிறது .இந்த புத்தகம் சூனியக்காரர்கள் வாழும் காலத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட மற்றும் உருவாக்கிய மந்திரிகளின் மந்திர குறிப்புகள் இந்த புத்தகத்தில் உள்ளது. சூனியக்காரி மற்றும் சூனியக்காரன் இறக்கும் போது இந்தப் புத்தகத்தையும் அவர்களுடன் சேர்த்து வைத்து எரித்து விடுவார்கள். எஞ்சியுள்ள ஒரே ஒரு புத்தகம் 2013ஆம் ஆண்டு பிளாக் மார்க்கெட் என்ற இடத்தில் 13 ஆயிரத்து 800 டாலருக்கு விற்கப்பட்டது. இந்த புத்தகம் 1960 இல் வாழ்ந்த பிரபலமான சூனியக்காரி பெக்காவால் எழுதப்பட்டது. இந்த புத்தகம் பேயின் சக்தியை எவ்வாறு அதிகப்படுத்துவது எவ்வாறு எழுப்புவது என்பதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .இது மந்திரவாதிகளுக்கு மட்டும் தெரிந்த மர்மமான ரகசிய மொழிகள் மற்றும் சில குறியீடுகளுடன் எழுதப்பட்டுள்ளது.இந்த மர்மமான குறியீடுகளுக்கு பின்னாலுள்ள ரகசியம் என்னவென்று இது வரைக்கும் யாருக்குமே தெரியாது .

5.ஆர்ஃபோன் கதையின் புத்தகம்-The Book of Orphon Story

ஆர்ஃபோன் என்ற புத்தகம் நானூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. 1600 ஆம் ஆண்டு ஒரு துறவியால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. 14 வயது சிறுவன் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி ஸ்பெயின் நாட்டைச் சுற்றிப் பார்ப்பது தான் இந்த புத்தகத்தின் கதைக் களமாகும் .இந்த புத்தகம் 2018 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது .கடந்த 400 ஆண்டுகளாக இந்தப் புத்தகம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இந்த புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்பவர்கள் மர்மமான முறையில் அல்லது மர்மமான காரணத்தினால் இறந்து விடுவார்கள். இந்த புத்தகத்தை வெளியிட நினைப்பவர்கள் ,மொழிபெயர்ப்பு செய்பவர்கள் தொற்று நோயாலும் திடீர் விபத்தினாலும் இறந்து போவார்கள் எனவேதான் இந்த புத்தகத்தை சபிக்கப்பட்ட புத்தகம் என்று அழைக்கப்படுகிறது .2018 ஆம் ஆண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டவர் தற்போது வரை உயிருடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6.கிராண்ட் க்ரிமோயர்-The Grand Grimoire

தி கிராண்ட் க்ரிமோயர் என்பது அதிசக்திவாய்ந்த சூனியக்காரர்களின் புத்தகம் என்று அழைக்கப்படுகிறது .இது பழங்கால சூனியக்காரர்களின் கிராண்ட் லைப்ரரி என்று கூறப்படுகிறது .புராணங்களின்படி ஒரு சாத்தானால் பாதிக்கப்பட்ட சூனியக்காரனால் எழுதப்பட்டது .இந்த புத்தகத்தில் எழுதப்பட்ட பேய்களைப் பற்றிய விஷயம் யார் கைகளுக்கும் போ ய் விடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது .இந்தப் புத்தகத்தின் தொகுப்புகள் வாடிகனில் உள்ள ஒரு சிறிய சுவரில்  மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இந்த புத்தகத்தை சரியாக பயன்படுத்தும் போது சாத்தானை நம்மால் எழுப்ப முடியும் என்று சொல்வது பல பேருடைய நம்பிக்கையாய் உள்ளது . இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு விலையாக தங்கள் ஆவியை ஒப்படைக்க வேண்டும். இந்த புத்தகம் 1512 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த புத்தகம் இன்றும் வாடிகனில் உள்ள சுவரில் ரகசியமாக ஏன் ?மறைத்து வைக்க வேண்டும் .இந்த புத்தகத்தை பற்றிய கதைகள் உண்மையாக இருக்குமோ ?என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

7.தி புக் ஆஃப் தி ஸ்கேர்டு மேஜிக் ஆஃப் அப்ரமெலின் தி மேஜிக்-The Book of the Scared Magic of Abramelin the Mage

தி புக் ஆஃப் தி ஸ்கேர்டு மேஜிக் ஆஃப் அப்ரமெலின் தி மேஜிக் என்ற இந்த புத்தகத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி பல மர்மமான விஷயங்கள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டில் அப்ரமெலின் என்னும் ஒருவர் புதையலைத் தேடி எகிப்திற்கு பயணம் செய்கிறார் . பயணத்தில் எங்கு தேடியும் எதுவும் கிடைக்காததால் திரும்பி வருகிற வழியில் தீய மந்திரவாதியை பார்க்கிறார் .அந்த தீய மந்திரவாதி பல மந்திரங்களை கற்றுக் கொடுத்தும் ,எவ்வாறு எந்த ஒரு பொருளையும் தங்கமாக்குவது எப்படி தன்னைத்தானே மறைத்துக் கொள்வது எப்படி உயிரிழந்தவர்களை உயிர்ப்பது எப்படி போன்ற பல்வேறு மந்திரங்களை கற்றுக் கொடுக்கிறார் .இந்த புத்தகம் மிகவும் சக்தி வாய்ந்த புத்தகம் அதே அளவுக்கு ஆபத்தானது .யார் ?ஒருவர் இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள்  சீக்கிரமாக மரணத்தை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது .

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன